தேனி மாவட்டம் மல்லிங்காபுரத்தில் உள்ள தனது குல தெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் சுவாமி இன்று தரிசனம் செய்தார்.
நடிகர் தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் மல்லிங்காபுரம். அதன் அருகே உள்ள முத்துரங்காபுரத்தில் அவர்களது குல தெய்வமான கஸ்தூரி மங்கம்மாள் ஆலயம் உள்ளது. அங்கு நடிகர் தனுஷ் இன்று தனது குடும்பத்துடன் சென்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தினார்.