இயக்குநர் வேலு பிரபாகரன் கடவுள் மறுப்பாளர் என்பது நாடறிந்த செய்தி.
அதனால் வாழ்நாள் முழுவதும் கடவுள் மறுப்பாளராகவே இருக்க வேண்டும் என்பதில்லை.
திரையில் கடவுள் மறுப்புக் கொள்கைகளை வலியுறுத்தியவரை பிரியாணிக்கடை அதிபர் மன மாற்றம் செய்திருக்கிறார்.
சேலம் தமிழ்ச்செல்வன் என்பவர் தன்னுடன் வேலு பிரபாகரனை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று முருகனை தரிசனம் செய்ய வைத்து முருக பக்தராக மாற்றி இருக்கிறார்.
வேலு பிரபாகரனும் லட்சக்கணக்கான பக்தர்களில் ஒருவராகி உருகி இருக்கிறார்.
இந்த மாற்றம் நிரந்தரமா….? கோலிவுட் வியப்புடன் எதிர்பார்க்கிறது.