சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத்துக்கு பெயர் என்னவாக இருக்கும் என்று ரஜினியின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கிடந்தார்கள்.
இன்று மாலை பெயர் அறிவிக்கப்படும் என்கிற தகவலால் டிவிட்டரை முற்றுகையிட்டனர்.
“அண்ணாத்த “என்கிற பெயரை தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததும் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறது.
மிகப்பெரிய இயக்கமாக திமுகவை கட்டிக்காத்தவர் பேரறிஞர் அண்ணா. அனைவரையும் அன்பாக அணைத்து திராவிட உணர்வை அணையாமல் காத்தவர். அவரது பெயரை நினைவூட்டும் வகையில் கலைஞரின் குடும்பத்தைச் சேர்ந்த பட நிறுவனம் ரஜினியின் படத்துக்கு வைத்திருக்கிறது. தமிழக வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் பாதகமாக இருந்திருக்கிறது என்று தெய்வீக அரசியல் நடத்தப் போகிற ரஜினியின் படத்துக்கு சூட்டியிருக்கிறார்கள் .கறுப்பின் பேக் கிரவுண்டில் தலைப்பு சிவப்பு நிறமாக இருக்கிறது.
பேரறிஞர் அண்ணாவின் அருமை பெருமைகளை ரஜினிக்கு வாரி வழங்குவதை போல டைட்டில் அமைந்திருக்கிறது.
அதுவும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு, ரஜினியின் கட்சிப் பெயர் அறிவிக்கப்பட வேண்டிய கால கட்டத்தில் ‘அண்ணாத்த ‘என்கிற பெயர் அவரது புதிய கட்சிக்கு ஊக்க மருந்தாக அமையலாம்.
இந்த படத்தில் குஷ்பூ ,மீனா ,கீர்த்தி சுரேஷ் ,நயன்தாரா ஆகியோர் நடிக்கிறார்கள்.இமான் இசை அமைக்கிறார். தல அஜித்குமாரின் அன்புக்குரிய சிறுத்தை சிவா இயக்குகிறார்.