
இயக்குநர் சாமி என்றால் சிந்து சமவெளி,மிருகம் போன்ற படங்கள்தான் முன்னுக்கு வந்து நிற்கிறது.அந்த அளவுக்கு அந்த படங்கள் அவரை கான்ட்ரவர்ஸி டைரக்டராக அடையாளப்படுத்தியது. ஆனால் அமலாபால் என்கிற நடிகைக்கு சாமியின் படம்தான் விசிட்டிங் கார்டாக இருந்தது என்பதை மறக்க முடியாது.
காலங்கள் உருண்டோடி விட்டன.
தன்னை சாமி புதுப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார்.
புகழ் பெற்ற ஈரானிய டைரக்டர் மஜித் மஜிதி என்பவர் இயக்கிய ‘சில்ரன் ஆப் ஹெவன் ‘என்கிற படம் உலகளவில் விருதுகளை அள்ளிய படம்
அந்த படத்தை ‘அக்கா குருவி ‘என்கிற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சாமி எடுக்கத் தொடங்கினார். அவரது நண்பர்களுடன் சேர்ந்து அவர் தயாரித்திருக்கிற படம்.
அந்த படத்துக்கு தற்போது பலம் சேர்க்கிறார் இசைஞானி இளையராஜா.

தன்னுடைய திரை அனுபவம் பற்றி இயக்குநர் சாமி என்ன சொல்கிறார்.?
“நான் முன்னர் இயக்கிய மூன்று படங்களும் எனது அடையாளம் அல்ல.
இனிமேல்தான் என்னை அடையாளப் படுத்திக்கொள்ளப்போகிறேன். அக்கா என் வீட்டிற்கு வந்தபோது ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ திரைப்படத்தை குழந்தைகளுக்கு போட்டுக் காண்பித்தேன்.. இதுபோன்ற படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை? என்ற என்பது அக்காவின் கேள்வி .,
உடனே அந்த ப்படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்யும் உரிமையைப் பெற்றேன்.
கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பூம்பாறை என்று உரை தேர்ந்தெடுத்தேன். இவ்வூரில் உள்ள வீடுகள் 500 வருடங்கள் பழமையானவை. ஆகையால், நான் நினைத்தது போல் படத்தின் உணர்வை சிதையாமல் கொடுக்க இந்த இடம் தான் சரியானது என்று படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம்.
கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பூம்பாறை என்று உரை தேர்ந்தெடுத்தேன். இவ்வூரில் உள்ள வீடுகள் 500 வருடங்கள் பழமையானவை. ஆகையால், நான் நினைத்தது போல் படத்தின் உணர்வை சிதையாமல் கொடுக்க இந்த இடம் தான் சரியானது என்று படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம்.
இப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அணுகினேன். அவர் படத்தை எடுத்துமுடித்து விட்டு வாருங்கள் என்று கூறிவிட்டார். படம் முடிந்ததும் அவரிடம் போட்டுக் காண்பித்தேன். உடனே இசையமைக்க ஒப்புக் கொண்டார். தற்போது, பின்னணி இசையமைக்கும் பணியைத் தொடங்கி விட்டார்.”என்று சொல்கிறார் சாமி.