
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வராத நடிகைகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஒரு நிகழ்ச்சியில் கண்டித்துப் பேசினார்.
நடிகை திரிஷா வராததை கண்டித்து அவர் எச்சரித்திருந்தார்.
இதை பற்றி திரிஷா தரப்பு எந்த வித ரீ ஆக்சனும் காட்டவில்லை.
ஆனால் நடிகைகள் மத்தியில் மட்டுமில்லாமல் நடிகர்கள் மத்தியிலும் தயாரிப்பாளரின் பேச்சு அதிருப்தியை கிளப்பியிருக்கிறது.
பெயர் சொல்ல விரும்பாத ஒரு நடிகர் தனது கருத்தை சொன்னார்.
“படத்தின் பிரமோஷனுக்கு நாங்கள் வருவதால் எங்களுக்கு பப்ளிசிட்டி கிடைப்பதை மறுக்க முடியாது. ஆனால் தயாரிப்பாளர்கள் சொல்லும் கால கட்டத்தில் படத்தை முடிப்பதில்லை. பணப் பற்றாக்குறை மற்றும் சில காரணங்களால் இழுத்தடிக்கப்படுகிறது. படத்தை முடிப்பதற்கு மூன்று ஆண்டு காலத்துக்கும் அதிகமாகிறது. நடிகரோ நடிகையோ மற்ற படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்திருப்பார்கள்.அந்த படத்தின் படப்பிடிப்பு தங்களால் காலதாமதம் செய்யப்படுவதை விரும்ப முடியாது.
மற்றோரு படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டை கேன்சல் பண்ண முடியாது. பாரின் அல்லது வேறு மாநிலங்களில் படப்பிடிப்பு நடக்கிறபோது சிலர் படத்தின் பிரமோஷனை வைத்துக்கொண்டு வரவில்லை என்று சொல்வதால் பலன் கிடைக்கப்போவதில்லை. நடிகர்களின் வாழ்க்கை அந்த ஒரு படத்துடன் நின்று போவதில்லை என்பதை குற்றம் சாட்டுகிற தயாரிப்பாளர்கள் உணர வேண்டும்.” என்கிறார்.
இதுவும் நியாயமாகத்தான் இருக்கிறது! குறிப்பிட்ட கால கட்டத்தில் படத்தை முடிக்காமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது சரியா?
நடிகர் சங்கம் என்ன சொல்கிறது.?












