அரசியல் நையாண்டிகள் பண்ணி தனது படங்களை வெற்றி பெறச்செய்தவர் ஆர்.ஜே .பாலாஜி. தமிழ்ச்சினிமாவின் கவனத்தை ஈர்த்தவர் .தற்போது சமுதாய கண்ணோட்டத்திலிருந்து மாறி விட்டாரா என்பது தெரியவில்லை.
நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்கிற பெயரில் பக்திப்படம் எடுத்திருக்கிறார். மறைந்த தேவர் ,ராம.நாராயணன் ஆகியோரின் வரிசையில் இவரும் இணைந்து விட்டாரா என்பது படம் வந்த பின்னர்தான் தெரிய வரும்.
மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிப்பதை சிலர் நக்கல் பண்ணி டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்கள்.
“யாரு அம்மன் வேடம் போடணும்கிற கூறுபாடு இல்லாம போச்சு ,இந்த கூமுட்டைகளுக்கு “என்பதாக துர்கைராஜ் என்பவர் ட்வீட் பண்ணியிருந்தார்.
இதற்கு பாலாஜி “உங்க பேர்ல இருக்கிற கடவுள்தான் உங்களுக்கு நல்ல புத்திய கொடுக்கணும் “என்பதாக சொல்லியிருக்கிறார்.
படத்துக்கான பிரமோஷன் வேலைகளை இப்பவே பாலாஜி தொடங்கிட்டார்னுதான் தோணுது.!