இந்தியன் 2 படப்பிடிப்பின் போது எதிர்பாராமல் நடந்த கிரேன் முறிந்து விழுந்த வழக்கில் மத்திய குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த விசாரணைக்கு லைகா நிறுவன முக்கிய அதிகாரி ,இயக்குநர் ஷங்கர் ,உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் உள்ளிட்ட பலரை காவல் துறை அளித்திருக்கிறது.
இந்த விசாரணைக்கு இன்று காலை 10 மணி அளவில் கமல்ஹாசன் ஆஜராகி இருந்தார். சென்னை எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்தான் மத்திய குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் இருக்கிறது.
ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் கமல்ஹாசனை குடைந்திருக்கிறது காவல் துறை.
இதற்கு முன்னர் எத்தனையோ விபத்துகள் ,உயிர்ப்பலிகள் நடந்திருந்தாலும் இந்த அளவுக்கு போலீஸ் கடுமையாக நடந்து கொண்டதில்லை.
விசாரணை முடிந்து வெளியில் வந்த கமல்ஹாசன் அங்கு காத்திருந்த செய்தியாளர்களிடம் விசாரணை விவரங்களை தெரிவித்தார்.
“படப்பிடிப்பின்போது நடந்தவைகளை சொன்னேன் “