சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிப்பது உறுதி என்பது தெரிந்திருந்தும் சிலர் ‘அவர் கட்சி ஆரம்பிக்க மாட்டார்.அவரது படம் ஓடுவதற்காக இப்படியெல்லாம் பில்டப் கொடுக்கிறார் “என்பதாக சொல்லிவந்தனர்.
அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் இன்று ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் குரு ராகவேந்திராவுக்கு உகந்த வியாழக்கிழமையில்ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை காலையில் இருந்து சந்தித்துக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
கடுமையான பாதுகாப்புடன் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
மத்திய மாநில உளவுத்துறையை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டிய பத்திரிகையாளர்களிடம் தகவல்களை கேட்டு பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
37 மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதிகள் ,மாவட்ட செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு செயலாளரிடமும் அவரவர் கருத்துகளை கேட்டு வருகிறார் ரஜினிகாந்த். 10.30 மணிக்கு மண்டபத்துக்கு வந்த ரஜினி 10.40 மணிக்கு மேடைக்கு வந்து விட்டார்
அரங்கம் அதிர அவர்களது தலைவருக்கு வாழ்த்து சொல்லி கரவொலி எழுப்பினார்கள்.
சுருக்கமான உரை. அதன் பின்னர்தான் கருத்து கேட்டல் நிகழ்வு தொடங்கியது.
-
எத்தனை உறுப்பினர்களை சேர்த்திருக்கிறீர்கள். அவர்களில் பெண்கள் எத்தனை பேர்?
-
உங்கள் மாவட்டத்தில் எந்தெந்த தொகுதிகளில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது?
-
சாதி அரசியல் செய்வது யார்?
-
நாம் தனித்துப்போட்டியிட்டால் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிற வாய்ப்பு இருக்கும்?
-
யாருக்கும் அஞ்சாமல் செயல்படுவதற்கு மாவட்டத்தில் இருக்கிற நமது காவலர்கள் செயல்படுவார்களா?
-
தற்போதைய எதிர்க்கட்சிகளை எதிர்த்து ,பண சக்திகளை எதிர்த்து நம்மால் செயல்பட முடியுமா?
-
நாம் வெற்றி பெறுவதற்கு யாருடனும் கூட்டு சேர வேண்டிய அவசியம் இருக்கிறதா?
-
கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாமா?
-
வருகிற சட்டசபை தேர்தலில் நாம் போட்டியிடுகிறோம். அஞ்சாமல் வேலை செய்!
இத்தகைய கேள்விகளை ரஜினிகாந்த் கேட்டதாக தெரிகிறது.மாவட்ட செயலாளர்கள் கருத்துக்கள் அத்தனையும் சுருக்கெழுத்தரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதிநிதிகளுக்கான மத்திய உணவு மண்டபத்தில் தயாராகிறது .
மத்திய உணவுக்குப் பின்னர் மாவட்ட செயலர்கள் ஊருக்கு புறப்பட்டுச்செல்கிறார்கள்.
“நோ பிரஸ்மீட்!”என்று சொல்லப்பட்டிருக்கிறது.
மதியம் ஒரு மணிக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்