.,அண்மையில் வெளியான ஜிப்ஸி திரைப்படம் இந்திய நாட்டின் இன்றைய நிலையை சொல்கிற படமாக அமைந்திருக்கிறது.மதவெறியினால் முன்னர் நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங்களை கதைக்களமாக வைத்திருந்தார் இயக்குநர் ராசுமுருகன்.இவர் கம்யூனிசம் பேசுகிறவர்.
மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனும் கம்யூனிசம் பேசுகிறவர் .பகுத்தறிவுக் கொள்கையாளர்.தன்னை ஒரு போதும் பிராமணர் என்று சொல்லிக்கொண்ட தில்லை.தனது மகள்களின் பள்ளிச்சேர்க்கை படிவத்தில் கூட இன்ன சாதி என்பதை குறிப்பிட்ட மறுத்தவர்.
அவர் ஜிப்ஸி படத்தைப்பார்த்து விட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
”மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்”.
இயக்குநர் ராஜுமுருகன்,தயாரிப்பாளர் அம்பேத்குமார், நடிகர் ஜீவா, கதாநாயகி நடாஷா சிங் உள்ளிட்ட ஜிப்ஸி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். படக் குழுவினருடன் இயக்குநர் கவுதம் வாசுதேவமேனன்,தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷும் சென்றிருந்தார்கள் .