“ஓட்டுக்கு காசு வாங்க மாட்டேன் என்று சொல்லும் கடமை உங்களுக்கு மட்டுமல்ல, வாங்குவோர் கையை தட்டிவிடும் உரிமையும் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.” என்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன்.
அப்படித் தட்டிவிடுகிறவனின் கையை காவல் துறையினரே முறித்து விடுவார்கள் என்பது கமலுக்குத் தெரியாதா? தொகுதியில் கலவரம் செய்தான் என பொய்யாக வழக்கும் போட்டு விடுவார்கள்.மாட்டி விடப்பார்க்காதீர்கள் ஆசானே!
அந்த புத்தரே வந்தாலும் போதி மரத்தினடியில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் உபதேசத்தை என்று சொல்கிற அளவுக்கு மக்கள் வளர்ந்து இருக்கிறார்கள்.
கோடியில் சம்பாதிக்கப்போகிறவனிடம் 2 ஆயிரம் வாங்கினால் தப்பில்லை என்பது மக்களின் நம்பிக்கை. அரசியல் என்பது வியாபாரமே என்கிற அளவுக்கு பழகிப்போய் விட்டார்கள். அவர்களை திருத்துவது என்பது காளை மாட்டில் பால் கறப்பது போலத்தான்!
“தமிழ்நாட்டில் இருக்கும் 31,266 அரசுப்பள்ளிகளில், 11,906 பள்ளிகளுக்கு (38.07%) சுற்றுச்சுவர் இல்லை என்பது அப்பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. பள்ளிகளில் பாதுகாப்பு என்பது அவசியம். இந்த அவலநிலை மாற, அரசின் மெத்தனப்போக்கு மாற வேண்டும். நடக்குமா?”என்கிற சந்தேகமும் உலகநாயகனுக்கு இருக்கிறது.
எப்படி சார் மாறும்? போடுகிற சாலையில் கலப்படம் கண் முன்னே நடக்கிறது அதை நம்மால் மாற்ற முடிந்ததா?