சின்ன பட்ஜெட் படங்கள் என்றால் அவைகளுக்கு ஆதரவு தர வேண்டும் என்பது மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் நோக்கம்.
அதன் அடிப்படையில் பேய் படம் என்றாலும் தயங்க மாட்டார்.
திலகா ஆர்ட்ஸ் சார்பில் கார்த்தீஸ்வரன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘பேய் இருக்க பயமேன்’. இசை ஜோஸ் ஃபிராங்க்லின். ஒளிப்பதிவு அபிமன்யு, படத்தொகுப்பு ஜிபி கார்த்திக்ராஜா கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியவர் கார்த்தீஸ்வரன் .
இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்,
இப்படம் பிளாக் காமெடி வகையைச் சார்ந்தது. பேயை பார்த்து யாரும் பயப்பட கூடாது. அது நம்முடைய அடுத்த பரிமாணம் என்பதை மையக்கருவாக கொண்டு உருவாகியுள்ள படம்தான் இந்த ‘பேய் இருக்க பயமேன்.’
இப்படம் குழந்தைகளை பெரிதும் கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன.
இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பாளராக பாய்ஸ், ராவணன், மங்காத்தா, காஞ்சனா போன்ற வெற்றி படங்களில் பணியாற்றிய சேது பணியாற்றியுள்ளார்.
இப்படத்தில் கதாநாயகனாக நானே நடித்துள்ளேன். கதாநாயகியாக காயத்ரி ரெமா அய்யர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் முத்துக்காளை, நெல்லை சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நெடுநல்வாடை திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜோஸ் பிராங்கிளின் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் முதல்போஸ்டரைத்தான் மக்கள் செல்வன் விஜய சேதுபதி வெளியிட்டிருக்கிறார்,
—