ஷ்ரின் கான்ச் வாலா . நினைவிருக்கிறதா?
“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”படத்தில் சொட்ட வாலைக்குட்டி மாதிரி ஒரு துறுதுறு நடிகை வந்தாரே அதே நடிகைதான் தற்போது சிபிராஜ் ஜோடியாக நடித்துள்ளார். “வால்டர்” படத்தின் வெற்றிக்காக வெயிட் பண்ணுகிறார்.
படம் குறித்து நடிகை ஷ்ரின் கான்ஞ்வாலாசொல்வது யாதெனில்…
தமிழ் தெரியவில்லை என்றாலும் ஆங்கிலம் சர்வ சாதாரணமாக வருகிறது. அதுதானே தமிழ்ச்சினிமாவில் நடிப்பதற்கான தகுதி…!
ஷ்ரின் சொல்லுங்கம்மா சொல்லுங்க.!
“டைரக்டர் அன்பு கதையை சொன்னபோது எனக்குள் மிக்சைட் ரீஆக்சன்ஸ் .அசந்துட்டேன். சூப்பர்ப். திகில் இருந்தது. ஆர்வம் ஏற்பட்டது. நமக்கு என்ன மாதிரியான கேரக்டர் கிடைத்திருக்கிறது என்கிற உணர்வோடுதான் நடிப்பதற்கு ஓ கே சொன்னேன்.
‘இதெல்லாம் ரியல் இன்சிடென்ட்ஸ் என்று அன்பு சொன்னதும் நடிப்பதற்கான ஸ்கோப் நிறைய இருப்பதை உணர்ந்தேன்,
படத்தில் ரொமான்சுக்கும் குறைவில்லை. . சிபிராஜ் ஒரு அற்புதமான நடிகராக, எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். . இப்படம் ரசிகர்களை கமர்ஷியலாக கவருவதுடன் சமுகத்திற்கான தேவையான முக்கியமான கருத்தை கூறுவதாகவும் இருக்கும்”என்கிறார்.
தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார்.
படம் வெளியிடுவதற்கு முன்னரே எல்லா ஏரியாவிலும் நல்ல விலைக்குப் போய் இருக்கிறது .சாட்டிலைட் உரிமையும் செமத்தியான விலை. சூப்பர்ப்.