என்னங்கய்யா நடக்குது நாட்டில.!
“எடுத்த படத்தை தியேட்டருக்கு கொண்டு சேர்ப்பதற்கும் ஈரக்குலை வெளியே வந்து விடுகிறது.”என்று தயாரிப்பாளர்கள் மேடையில் புலம்பினாலும் பட பூஜைகள் நடப்பது மற்றும் குறைவில்லாமல் நடக்கிறது.
பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தமும் இணைந்திருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரோடக்சன்ஸ் கலை, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், ஆகியோர் ,குத்துவிளக்கு ஏற்றினார்கள் .
பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இசை சந்தோஷ் தயாநிதி, கலை வினோத், படத்தொகுப்பு தமிழ், ஆடை வடிவமைப்பு தினேஷ் மனோகரன், தயாரிப்பு நிர்வாகம் அருண் ராஜா, நடனம் அசார், சண்டை காட்சிகள் பில்லா ஜெகன், மேனேஜர் துரை, பாடல்கள் மதுரை பாலா, அ.ப. ராஜா, மக்கள் தொடர்பு யுவராஜ்.