தெலுங்கில் தனக்கென இடம் வைத்திருப்பவர் திரிஷா .
அங்குள்ள பிரபலங்கள் திரிஷாவுடன் நடிப்பதற்கு விருப்பம் உள்ளவர்கள்தான். இன்னும் சொல்வதென்றால் பிரபல நட்சத்திரக் குடும்பத்து ராணா டகுபதியுடன் இணைத்துப் பேசப்பட்டவர்தான் திரிஷா.
ஆனால் அதெல்லாம் பழங்கதை .
ஆந்திராவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிப்பதற்கு திரிஷா அண்மையில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மிகவும் பெரிய பட்ஜெட் படம்.
ஆனால் இடையில் என்ன நேர்ந்ததோ ,தற்போது அந்த படத்திலிருந்து விலகிக்கொள்வதாக திரிஷாவே அறிவித்திருக்கிறார்.
“சில விஷயங்கள் முதலில் சொல்லப்பட் டதற்கு மாறாக பின்னர் நடந்து விடலாம். சிரஞ்சீவி சாரின் படத்திலிருந்து கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகிக்கொள்ள நேர்ந்திருக்கிறது.
தெலுங்கு ரசிகர்களுக்கு நல்ல சேதி .வேறு படத்தில் உங்களை சந்திப்பேன்”என்பதாக கூறியிருக்கிறார்.