ஷீலா கவுர் .
குழந்தை நட்சத்திரமாக தமிழில் நடித்திருக்கிறார். அஜித்,விஜய் ,சூர்யா ஆகியோருடனும் நடித்திருக்கிறார். இயக்குநர் பாலாவின் நந்த படத்தில் சூர்யாவின் தங்கையாக நடித்திருக்கிறார்.
தெலுங்கிலும் நடித்திருக்கிறார்.ரொம்ப நாளாக ஒரு தொழிலதிபருடன் காதலில் இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் திடீர் என்று சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் ரெட்டியுடன் ஷீலாவுக்கு கல்யாணம் நடந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
சினிமா தொழில் சார்ந்த பிரமுகர்கள் அழைக்கப்படவில்லை.