பொங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது!
ஆனால் அடங்கிப் போவாரா?
“எதற்காக அடங்கணும் யாருக்காக அடங்கணும்? எதுக்கு எங்க தளபதியை அடக்கணும்னு நினைக்கிறீங்க?அடங்கிப்போன்னு சொல்றதே சர்வாதிகாரம்தானே! சர்வாதிகாரம் புதை குழிக்குப்போயி புல்லு முளைச்சுப்போய் புதர் மண்டிக்கிடக்கு.!அதனால சொல்றோம்,எங்க தளபதி நீதி நேர்மை நியாயத்துக்கு தலை வணங்கிப் போகிற ஆளே தவிர அடாவடிக்கு ஒரு போதும் அடங்க மாட்டாரு. அட அடக்கமுடியாதுய்யா.!”என தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் நம்மிடம் கனல் கக்க பேசினார்.
தளபதியின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று.!
எந்த லீலா பேலஸில் அரசியல் நிலைப்பாடு பற்றி “எழுச்சி”உருவாகட்டும் என சூப்பர்ஸ்டார் ரஜினி டிக்ளேர் பண்ணினாரோ,அதே லீலா பேலஸில் இன்று மாஸ்டர் இசைக்கப்போகிறார்.
விஜய்யின் பேச்சுதான் நாளைய தலைப்பு செய்தி.
ரஜினியின் எழுச்சிப்பேச்சின் வீரியத்தை குறைக்கும் பேச்சாகவும் அமையலாம்.
சொல்லிவைத்ததுபோல விஜய் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள் வீடுகளில் மட்டும் ரெய்டு பண்ணி தொல்லைகள் தருகிறார்கள்.?
மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ. இவர் விஜய்யின் நெருங்கிய உறவினர்.
இணைத் தயாரிப்பாளர் லலித் குமார். நாலைந்து நாட்களுக்கு முன்னர் இவரின் வீட்டுக்குப் போய் குடைந்திருக்கிறது வருமானவரித்துறை.
பிகில் படதயாரிப்பாளர் ஏஜிஎஸ் ,பைனான்சியர் மதுரை அன்புச்செழியன் ஆகியோர் வீடுகளில் முன்பு ரெயிடு விட்டார்கள். தற்போது பயம் காட்டிவிட்டு வெயிட் அண்ட் சீ மோடில் இருக்கிறார்கள்.
தொடர்ந்து காரணம் இல்லாமல் தொல்லைகள் தந்தால் யாரும் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.
ரசிகர்களின் வெறித்தனமான ஆவேசத்தை நெய்வேலியில் பார்த்த பின்னரும் அவர்களை வம்புக்கு இழுப்பது மாதிரியான செயலில் இறங்குவது நல்லதுதானா?
விஜய்யின் இன்றைய பேச்சு பல பிரச்னைகளை உள்ளடக்கி ஜாடையாக வெளிப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
‘அண்ணா வந்தா ஆட்டம்பாம்!”இது பாட்டு வரி