“நீ உலகநாயகனாக இருக்கலாம். அத நாங்க எப்படி நம்புறது” என்கிற சந்தேகம் நம்ம காவல் துறைக்கு வந்திருக்கிறது போலும்!
“கிரேன் அறுந்து விழுந்திருக்குள்ள.அதில 3 பேரு செத்திருக்காங்கள்ல .அத இப்ப எங்களுக்கு நடிச்சு காட்டுங்க “என ஆசைப்பட்டிருப்பார்கள்னும் சொல்லலாம்.
விசாரணையின் போது நடித்துக்காட்டச் சொல்லி கமலை துன்புறுத்தியதாக சென்னை உயர் நீதி மன்றத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
முன்பெல்லாம் கொலை குற்றம் சாட்டப்பட்டவரை எப்படி கொலை செய்தே என நடித்துக் காட்ட சொல்வார்கள். அது போலீசாரின் வழக்கம். போலீஸ் அடியில் இருந்து தப்புவதற்காக அந்த ஆளும் இப்படித்தான் சாமி என்று செய்து காட்டுவார்.
நடிக்கப்போன இடத்தில் நடந்த விபத்து பற்றி நடித்துக்காட்ட சொன்னால் எப்படி?
மேலிடத்து நிர்ப்பந்தமாக இருக்குமோ…! முதல்வராக முன்னர் இருந்த கலைஞர் கருணாநிதியையே கதற வைத்தவர்களய்யா நம்ம காவல்துறையினர்.!