கொரானா பயத்துடன் இப்போது சென்னையில் பெரியம்மை பயம்தான் அதிகமாக இருக்கிறது.
பெரியம்மையினால் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெரியம்மை பரவுவதற்கு சரியான காரணம் தெரியவில்லை.ஆனால் வெயில் கடுமையாக கொளுத்துகிறது. சித்திரை பிறப்பதற்கு முன்னாடியே வெயிலின் தாக்கம் கடுமையுடன் இருக்கிறது. போகப்போக என்ன ஆகுமோ என்பது தெரியவில்லை.
மக்கள்தான் கவனமுடன் இருக்க வேண்டும்.
இதன் அறிகுறி என்ன?
கடுமையான காய்ச்சல்,தோலில் அரிப்பு,சிறு கொப்புளங்கள்,தலைவலி கடுமையாக இருக்கலாம்.அடிவயிற்றில் வலி,வாந்தி ,பேதி இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். இது ஒரு தொற்று நோய் .சொந்தமாகவே இருந்தாலும் சந்திப்பதை தவிருங்கள்.அருகில் இருக்கிற மாநகராட்சி சுகாதார அதிகாரிக்கு தகவல் கொடுங்கள்.