
இளம்பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறித்து வந்த பொள்ளாச்சி புள்ளிகளை அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியாது.
தமிழ்நாடே மிரண்டு போனது.
சபரிராஜன்,எம்.சதீஷ் ,வசந்த குமார் ,திருநாவுக்கரசு ,ஆர் .மணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஆனாலும் ஆளுகிற அதிமுக கட்சியை சேர்ந்த பிரமுகர் தலையீடு இருப்பதால் நியாயம் கிடைக்காது என்று தி.மு.க. போராடியது. மக்களும் சேர்ந்து கொள்ளவே .பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ .தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டது.
நாட்டை உலுக்கிய இந்த வழக்கு இப்போது ஆமையாகி விட்டது.
திமுக,மக்கள் நீதி மய்யம் போன்ற எதிர்க்கட்சிகளும் முனைப்பாக இல்லை. 
நடிகர் கார்த்தி மறந்து விடாமல் தனது டிவிட்டர் பக்கத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கான நீதியை கேட்டிருக்கிறார்.












