‘ஷேக்ஸ்பியர் இன் லவ் ‘ ஆஸ்கார் விருதுகளை அள்ளிய படம்.
இருந்தபோது எதுவும் செய்யாத லோபி ஒருவன் அவனது ஆசை நாயகி செத்ததும் அவளுக்கு பளிங்கு மாளிகை கட்டினானாம் .
அம்மணமாக தரையில் உருண்டு ,நினைவுகளை அவளுடன் இணைத்துக்கொண்டவன் அந்த மயக்கத்திலேயே மடிந்து போனான் என்பது எவருடனோ பகிர்ந்த துணுக்குத் தொக்கு.
சட்டென இது நினைவுக்கு வந்தது ஹாலிவுட் ராஜாவுக்கு கொரானா என்கிற செய்தியை படித்ததும்தான் .!
ஷேக்ஸ்பியருக்கு காதலியை கொடுத்த அந்த செக்ஸ் பிரியர் ஹார்வி வென்ஸ்ட் .சதம் தொடுவதற்கு பத்து விக்கெட் தேவை என்கிறபோதுதான் ….
வில்லங்கம் ஜெஸ்ஸிகா மான் என்கிற பெண்ணின் வடிவில் வந்தது.
பட உலகில் பாலியல் வன்புணர்வு.,
படப்பிடிப்பு விளக்கு எரிய வேண்டும் என்றால் எனது படுக்கை அறை விளக்குகள் அணைய வேண்டும்.அவள் என்னுடைய அணைப்புக்குள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற தத்துவம் பகிரங்கப்பட்டது .
மிகப்பெரிய கோடீஸ்வரன்.ஹார்வி.
89 பெண்களுடன் எப்படியெல்லாம் படுக்கையில் விளையாடினானோ ,வேகம் தணிந்தானோ தெரியவில்லை.ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட பல பெண்கள் பட்டியலில் அடங்குவர்.
அந்த ஜெஸ்ஸிகாவிடம் மட்டும் புறவழி செக்ஸ் விரும்பி இருக்கிறான். போதாதா காலம் பாவம் ,மாட்டிக்கொண்டான்..
கற்பழிப்பு ,அடாத செக்ஸ் ,என அத்தனை காமவிளையாட்டுகளையும் வைத்து ஹார்வி மீது வழக்குப் பதிவாகியது.
68 வயது ஹாலிவுட் செக்ஸ் மன்னனுக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை.!
இது போதாது என்பது என்று காமதேவனின் எண்ணம் போலும்.!
கொரானாவையும் இலவச இணைப்பாக கொடுத்து இருக்கிறான்.
அமெரிக்காவில் மட்டுமே 33ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு 417 பேர் மரணித்திருக்கிறார்கள்.