
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பந்திபூர் புலிகள் சரணாலய பயணத்தைப் பார்த்தபோது மெய்யாகவே உடல் சிலிர்த்துப் போனது.
விருப்பு வெறுப்பு இல்லாமல் அவரது அந்த பயணத்தை அணுகிப் பாருங்கள்.
கடுமையான வெயிலில் காய்ந்து போய்க்கிடந்த அந்த 100 ஆண்டு கால இரும்புப்பாலம் கடக்க காரிலும் செல்ல முடியாது.நடந்து செல்லவும் முடியாது.
கம்பியைப் பிடித்துக்கொண்டு அடி மேல் அடி வைத்துதான் நகர்ந்து ,அதுவும் பக்கவாட்டில் நண்டைப் போல செல்ல வேண்டும்
வேறு வழியில்லை.
துருப்பிடித்த அந்த இரும்பு எத்தகைய சூட்டுடன் இருந்திருக்க வேண்டும்..
சற்று பிடி தவறினாலும் விழ வேண்டியதுதான்.பாதுகாப்பாக பாலத்துடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தாலும் அதன் விளைவு என்ன?
யோசித்துப்பாருங்கள்.
அந்த மனிதரின் மூச்சு வாங்கல் எத்தகைய அனுபவத்தை விழுங்கி இருக்கிறது. சூடு வாங்கிய கையை அவர் திருப்பித் திருப்பி பார்த்த போது ரசிகன் அழுதிருப்பான்.
பாதுகாப்பான பைட், டூப் போட நடிகர்கள் ,விழுந்தாலும் ‘பெட்’மீதுதான் என பழகிப்போன அந்த மனிதர் அந்த அத்துவானக் காட்டில் கணநேரத்தில் என்ன நினைத்திருப்பார்? அந்த வயதிலும் அதை அவர் செய்திருக்கிறார் என்றால் மனதில் உறுதி இல்லாமலா? இதை விட மோசமான காட்டில்தானே காட்டுராஜா வீரப்பனும் ஆண்டுக்கணக்கில் வாழ்ந்திருந்தான்.!
மூப்பின் நரம்புகள் கையின் புறப்பகுதியில் விடைத்து நிற்க ரத்த காயம்.தடுமாற்றம்.அனுபவம் இல்லாத காட்டு குளத்தில் நெஞ்சளவு ஆழத்தில் கிரில்ஸின் தோள் பற்றி நடந்த போது ரசிகன் துடித்துப்போனான்.
“எதற்காக தலைவா. இந்த கஷ்டம்,அவஸ்தை,ஏசியின் சுகத்தில் வாழ்ந்த உனக்கு இந்த அடர்ந்த கானகத்தின் வெப்பக்காற்றுதான் மேனியில் பட வேணுமா?
கை காட்டினால் பழுதடைந்த அந்த டயரை பத்து நிமிடத்தில் மாட்டிவிட வேலையாள் இருக்கிற பொது இந்த வித்தியாசமான அனுபவம் தேவைதானா என ஒவ்வொரு ரசிகனும் கலங்கி இருப்பான். ஆனால் அரசியல் பயணமும் இத்தகைய அவஸ்தைகள் வலிகள் கொண்டதுதான்!
வணிக ரீதியாக தலைவருக்கு வரவுதான் என்றாலும் இந்த வயதில் அத்தகைய வரவு அவசியம்தானா?












