பகத்சிங்-ராஜகுரு …
இந்த போராளிகளை எத்தனை அரசியல் தலைவர்களுக்குத் தெரியும்? ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக்கொன்ற இந்திய விடுதலைப் போராளிகள்.
தேசியவாதிகள் மறந்துவிட்ட புரட்சியாளர்களை ஒரு நடிகை நினைவு வைத்திருக்கிறார் என்றால் வியப்பாகத் தான் இருக்கும்?
நேற்று 23 ஆம் தேதி நடிகை கங்கனா ரனாவத் பிறந்தநாள்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி ‘என்கிற பெயரில் திரைப்படமாகிறது. ஜெ.வாக நடித்து வருகிறவர் கங்கனா. படத்தை இயக்குபவர் ஏஎல் .விஜய் .
இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கொரானாவினால் தடைபட்டு இருப்பதினால் மணாலிக்கு சென்று விட்டார். அங்குதான் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார்.
தெலுங்குப் படமான ‘கிராக்’படத்தின் வேலைகளும் முடங்கிப்போய் இருக்கின்றன .
இதில் என்ன சிறப்பு என்றால் மாவீரன் பகத் சிங் தூக்கில் போடப்பட்ட நாள் நேற்று.!
கங்கனாவின் பிறந்த நாளும் நேற்று.
அதனால் பகத் சிங்கின் நினைவைப் போற்றும் வகையில் பாடல்களை பாடி ,சிவலிங்கத்தை வணங்கி கொண்டாடினார்.