நம்பிக்கைதானே வாழ்க்கை?
வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையில்தான் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்கள்.
வழக்காடுவதும் ,வாக்காளர்களை நம்புவதும் ஒரு தீர்வை எதிர்பார்த்துதான்!
எந்த நம்பிக்கையில் நித்தியானந்தா நாட்டை விட்டு ஓடினார்?
எஸ்கேப் ஆவதை பார்த்தாலும் பணத்தைக் கொட்டி தப்பிவிடலாம் என்கிற நம்பிக்கையில்தான்!
இன்று வரை அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது இன்டர் நேஷனல் போலீசுக்குத் தெரியவில்லையாம். அதையும் நம்பிக்கொண்டுதானே இருக்கிறோம்.
அதனால்தான் மீண்டும் சொல்கிறோம் , நம்பிக்கைதான் வாழ்க்கை.!
அனு எம்மானுவேல் .அமெரிக்க குடியுரிமை பெற்ற நடிகை. நம்ம வீட்டுப் பிள்ளையில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கிறார். மிஷ்கினின் ‘துப்பறிவாளன் படத்திலும் முக்கிய வேடம்.
என்றாலும் தமிழை விட தெலுங்கில் அதிகப்படங்கள்.சில வெற்றி,பல தோல்வி என அவரது வரை படம் கோடு போட்டு காட்டுகிறது.
இதனால் நொந்து போனாரா என்ன?
தெம்புடன் சொல்கிறார். “முந்தைய படங்கள் எனக்கு சரியில்லைதான்.ஆனால் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. விட்ட இடத்தைப் பிடிப்பேன் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன்” என்கிறார்.
நம்பிக்கைதானே வாழ்க்கை.!