
கோர நோயினால் இன்னுயிரை இழப்பது கொடிதிலும் கொடிதுதான்.! ஆனால் வறுமையில் சாவது,வருவாய்க்கு வழியில்லாமல் சாகடிப்பது எதில் சேரும்?
கொரானாவின் பாதிப்புகளில் இவைதான் இன்றைய தலையாய பிரச்னை.!
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் இது தொடர்பாக முன்னரே பிரதமர் மோடிக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
கமல்ஹாசனின் கடிதத்தை பிரதமர் அலுவலகம் எந்த அளவுக்கு எடுத்துக்கொள்ளும் என்பது தெரியாது.
இந்த நிலையில் கமல்ஹாசன் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பதாவது:
“உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க.
பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல.
இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர்.
இது சரித்திரம்.”












