
தினமும் முறையாக கிளினிக் நடத்திய அப்போலா போன்ற மருத்துவமனைகள் கதவடைப்பு செய்து விட்டது.
இங்கு தினமும் வந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் வேறு வழி தெரியாமல் நோய் முற்றக்கூடிய கவலையில் இருக்கிறார்கள்.
பெரிய மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு போதிய பணம் இல்லாமல்தான் அத்தகைய கிளினிக்குகளை நம்பி இருந்தார்கள்.மருத்துவத்துறையினரும் அரசுகளும் சரியான வழியைக் காட்டாமல் கொரானாவை மட்டுமே காரணம் காட்டுவது நீதி ஆகாது.
இத்தகைய நிலையில்தான் மக்கள் நீதி மையத்தலைவர் கமல்ஹாசன் தனது வீட்டை மருத்துவ மனையாக மாற்றி டாக்டர்களை வைத்து சிகிச்சை அளிக்க முன்வந்திருக்கிறார்.
“இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்” என்பதாக டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
அரசாவது அனுமதி கொடுப்பதாவது .?சும்மா கிடங்க உலகநாயகனே.!












