
கொள்ளை நோய் என்பது இருப்பவன் இல்லாதவன் என்கிற பேதம் பார்த்து வருவதில்லை.
அரண்மனை வாரிசு என்பதால் கொடிய நோய் விலகிப் போய் விடாது.
மன்னர் என்றாலும் கொரானாவுடன் கை குலுக்கக்கூடாது .கை குவிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறது.
சூரியன் அஸ்தமனம் ஆகாத நாடு என ஒரு காலத்தில் ஆங்கிலப்பேரரசை குறித்து சொல்வார்கள். கால போக்கில் வரலாறு புதிய பக்கங்களை இணைத்துக்கொண்டது. ஆங்கில பேரரசு சுருங்கிப்போனது.
ஆனாலும் மாண்பு காக்கப்பட்டது.
இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ்.வயது 71.
பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது பழக்கம். அப்படி பங்கெடுத்துக் கொண்டதின் விளைவோ என்னவோ சார்லசுக்கு கொரானா தொற்று.
ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் இளவரசரும் மனைவி காமிலாவும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இளவரசிக்கு நோய் தொற்று இல்லை.












