அரசாங்கமும் அதிகாரபூர்வமான இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அறிவிக்காதவைகளை சோசியல் மீடியாக்களில் சிலர் தவறாக பதிவிட்டு வருகிறார்கள்.
அவை முழுக்க முழுக்க தவறானவை .நம்ப வேண்டாம்.
அரசு சொல்வதை மட்டுமே மக்கள் நம்பவேண்டும் .எத்தகைய சுய பரிசோதனையும் செய்து கொள்ள முடியாது.
இந்திய அரசின் தகவல் படி கொரானா கேஸ் 649 .மரணம் 10.
553 கேஸ்கள் சற்று கடுமையானவை.29 தனியார் லேப் களில் மட்டும் 16 ஆயிரம் சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருக்கின்றன.
உலக அளவில் கொரானாவின் மரணம் 4. 32 சதவீதமாக இருக்கிறது.
செல்ப் குவாரன்டைன் ,அதாவது வீட்டை விட்டு வெளியில் வராமல் இந்திய மக்கள் முழுமையாக ஒத்துழைத்தால் கட்டுப்படுத்தி விடலாம் என்கிறார் இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.கே.அகர்வால்.
உலக அளவில் கொரானாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரம் .இத்தாலியில் மட்டும் 7500 என்கிறார்கள்.ஸ்பெயினிலும் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்படுத்திருக்கிறது.
மக்களே வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் !அரசுக்கு ஒத்துழைத்தால் பாதிப்பு இருக்காது.