ஒரு வீடு காலியானால் அந்தவீட்டுக்கு இன்னொருவர் குடி வருவது இயல்பு.
விஷால் காலி செய்த வீட்டுக்கு இப்போது சிம்பு குடி வந்திருக்கிறார்.
மிஷ்கின் -விஷால் கடுமையான மோதலுக்கு பிறகு ஏடா கூடமான நிலையில்தான் இருவருமே இருக்கிறார்கள்.
எம்.எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ‘சக்ரா’ படத்திலும் விஷால் நடித்து வருகிறார். துப்பறிவாளன் 2, சக்ரா இரு படங்களையும் நடிகர் விஷால் சொந்தமாக தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்திலும் விஷால் நடிப்பதாக கூறப்பட்டது.
விக்ரம் பிரபுவின் அரிமாநம்பி, விக்ரம், நயன்தாராவின் இருமுருகன், விஜய் தேவரகொண்டா, மெஹ்ரின் நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த சங்கர் விஷால் ஜோடியாக ரிது வர்மா, வில்லனாக ஆர்யா ஆகியோரும் நடிப்பதாகக் கூறப்பட்டது.
இந்த படத்தையும் துப்பறிவாளன்-2.சக்ரா படங்களுடன் சேர்த்து, நடிகர் விஷாலே சொந்தமாகத் தயாரிக்க இருந்தாக சொன்னார்கள்.
படத்துக்கான பட்ஜெட், விஷால் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததால், ஏற்கனவே 2 படங்களை தயாரித்து வரும் விஷால், இதையும் அதிக பட்ஜெட்டில் தயாரிக்க தயங்கி, இப்படத்திலிருந்து ஒதுங்கிவிட்டார் என்றார்கள்.
இயக்குநர் ஆனந்த் ஷங்கரும், வேறு தயாரிப்பாளரைத் தேடி விட்டார்.
மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் செவன்ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார், இந்தப் படத்தைத் தயாரிக்கமுன் வந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதில் விஷாலுக்குப் பதில் சிம்பு நடிப்பார் என்கிறார்கள்.
மாநாடு முடிந்த பின்னர் ஆனந்த்ஷங்கரின் இயக்கத்தில் சிம்பு நடிக்கலாம் ,