
உதவி செய்வது என்பது அவரவர் மனது சார்ந்தது, இதை அரசியல் ஆக்கக்கூடாது .
ஆனால் சிலர் இதை செய்கிறார்கள்.
ஆந்திர நடிகர்கள் கொரானாவுக்கு நிதி உதவி செய்ததை பட்டியலிட்ட மும்பை ஊடகத் துறையினர் தேவையில்லாமல் அந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரையும் சேர்த்திருக்கிறார்கள்.
பவன் கல்யாண் பிரதமர் நிவாரண நிதிக்கு 1 கோடி,ஆந்திராவுக்கு 50 லட்சம் ,தெலங்கானாவுக்கு 50 லட்சம் ,ராம் சரண் 70 லட்சம் ,இவரின் அப்பா சிரஞ்சீவி தினக்கூலி தொழிலாளர்கள் நலனுக்காக 1 கோடி ,மகேஷ்பாபு முதல்வர் நிதிக்காக 1கோடி ,ஆந்திரா ,தெலங்கானா ,கேரளா வுக்காக அல்லு அர்ஜூன் 1.25 கோடி ,’தமிழ்நாடு தலைவா ரஜினிகாந்த் ’50 லட்சம் பெப்சி தொழிலாளர்களுக்காக கொடுத்திருக்கிறார் என எழுதி இருக்கிறார்கள்.
குறிப்பாக ரஜினியை குறிப்பிடும்போது ‘தமிழ்நாடு தலைவா’ என்பதாகவே எழுதியிருக்கிறார்கள். ஆந்திராவின் உச்ச நடிகர்களுக்கு எவ்வித பட்டமும் கொடுக்காமல் ரஜினிக்கு மட்டும் எதற்காக அந்த சிறப்பு அடை மொழி? உள் நோக்கம் இருக்கிறதா இல்லையா? மும்பை மிர்ரர் என்கிற இணைய தளம் வெளியிட்டுள்ள படமும் பிரசுரம் ஆகியிருக்கிறது.












