‘விழித்திரு,விலகி இரு,வீட்டை விட்டு வெளியே வராதே ‘–கொள்ளை நோய் கொரானா நமக்கு சொல்லி இருக்கிற பாடம்.மந்திரச்சொல் என்றாலும் தப்பில்லை.
உலகமே இன்று அப்படித்தான் விலகி இருக்கிறது. எப்படா இந்த சனியன் தொலையும் என்கிற வெறுப்பில் இருக்கிறார்கள் .இத்தாலி,ஸ்பெயின் ,அமெரிக்கா என்கிற பணக்கார நாடுகளில் சாவு எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு இருக்கிறது.
இது பயோ வார் என மறு உரு பெறுமோ என்கிற அச்சம் வந்திருக்கிறது.
இத்தகைய சூழலில் நமது திரைப்பட நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் .சிலர்தான் தங்கள் தனிமை இப்படி இருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்வார்கள்.பலர் வெளியில் சொல்வதில்லை .
திரிஷா துணிச்சலான நடிகை .
கான்பரன்ஸ் கால் போட்டு ராணா டகுபதி ,அல்லு அர்ஜூன் ஆகியோருடன் பேசிவருகிறார்.
“இந்த குறும்பர்களுடன் சிரித்துப் பேசி பொழுது போகிறது “என்பதாக பதிவிட்டிருக்கிறார்.
ராணாவுடன் நீண்ட கால நடிப்பில் இருந்தவர் திரிஷா. இருவரும் குறுகிய காலம் டேட்டிங்கில் இருந்தார்கள்.
ஆனால் அது பலன் தரவில்லை என்பதை ராணா ஒப்புக் கொண்டிருக்கிறார்.