பட்டும் திருந்தவில்லை என்றால் என்ன செய்வது?
கொரானா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்தது சீன நாடுதான்.! அந்த நோய்க்கான காரணம் வவ்வால், மற்றும் பாங்கொலின்ஸ் என்கிற எறும்பு தின்னி என்று சொன்னார்கள். இவைகளின் இறைச்சி மார்க்கெட்டை சீனா மறுபடியும் திறந்து விட்டிருக்கிறது..
வவ்வால் ,பாங்கொலின்ஸ் ,நாய் ,ஆகியவைகளின் இறைச்சி மார்க்கெட்டை திறந்து இருக்கிறது. சீனாவின் ஹூபேய் மாநிலத்தில்தான் முதல் கொரானா வைரஸ் ஆசாமி இத்தகைய இறைச்சி மார்க்கெட்டில் மாட்டியிருந்தார் என பல வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தகைய மார்க்கெட்களை மீண்டும் திறந்திருப்பது உலகை அச்சுறுத்தி இருக்கிறது.
நாய், முயல், இவைகளை வெட்டுவதால் ஏற்பட்ட ரத்தம் படிந்த தரைகளை யாரும் படம் எடுத்து விடாதபடி பாதுகாவலர்கள் கண் கொத்தி பாம்பாக காவலுக்கு இருக்கிறார்கள்.,
“கொரனா வைரஸ் பற்றி சீன மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை.இது வெளிநாட்டவர்கள் கவலைப்பட வேண்டிய நோயாகிவிட்டது”என சீன பத்திரிகையாளர் சொன்னதாக அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.