ரொம்பவும் அழிச்சாட்டியம் பண்றீங்கடா ராசாக்களா…!
உங்களை கொரானா கொண்டு போய் விடக் கூடாதுன்னுதான் தனியா படுக்க வைத்து சிகிச்சை கொடுத்தால் பிரியாணி கேட்கலாமா?
ஹைதராபாத்தில் இருக்கிற காந்தி மருத்துவமனையில் கொரானா நோய் தடுப்புத் தொடர்பான தனி வார்டில் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக பெரிய மருத்துவமனைகளில் டயட்டிஷியன்கள் இருப்பார்கள். இந்த மருத்துவமனையில் டயட்டிஷியன் யாரும் இல்லை.
இதனால் நோயாளிகளுக்கு வழக்கமான உணவு ,வாழைப்பழம்,உலர் பழங்களுடன் கொடுக்கிறார்கள்.இது குறித்து டாக்டர்களே கவலைப்படுகிறார்கள்.
தற்போது இருக்கிற பிரச்னை தலையை பிய்த்துக் கொள்ள வைத்திருக்கிறது.
அதாவது ‘தனிமைப்படுத்தப்பட்ட’வார்டில் இருக்கிறவர்கள் தங்களுக்கு பிரியாணி வேண்டும் என்று கேட்டு பிரச்னை செய்திருக்கிறார்கள்.
நான்-வெஜ் கொடுப்பதற்கு அனுமதி கிடையாது என்று சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை.