
காதல் உச்சத்தில் இருந்தது இருவருக்குமே!
ரமலத்தை விட்டு தனித்து வரும்படி பிரபுதேவாவின் பெற்றோர் வற்புறுத்தியதால் மனைவியுடன் பிணக்கு ஏற்பட்டிருந்த காலம்.
அப்போதுதான் நயன்தாராவினுடைய நட்பு கிடைத்தது.
இருவரும் பழகினார்கள். .ஒன்றாகவே வாழ்ந்தார்கள்.
அதனுடைய உச்சம்தான் பிரபுவின் பெயரை நயன் தனது கையில் டாட்டூவாக குத்த வைத்தது.
சிரியன் கிறித்துவரான நயன்தாரா இந்த காலகட்டத்தில்தான் ஆரியசமாஜத்தின் வழியாக இந்துவாக மதம் மாறியதாக சொன்னார்கள். 
இது உண்மையா இல்லையா என்பதை இன்றுவரை நயன் சொல்லவே இல்லை. அவரும் இந்து கோவில்களுக்கு கர்ப்பகிரகம்வரை சென்று வருகிறார்.
மனைவி ரமலத்தை பிரபுதேவா அதிகாரபூர்வமாக பிரிந்த பிறகு தனது மகன்களை மட்டும் பிரிவதாக இல்லை. இரண்டு மகன்களையும் விடுமுறை காலத்தில் தன்னுடன் மும்பைக்கே அழைத்துச்சென்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
நயனுடைய காதலும் அவருக்கு ஆறுதலாக இருந்தது.
ஆனால் தங்களின் மணவாழ்வுக்கு குழந்தைகள் இடையூறாக இருக்கலாம் என்கிற ஐயம் நயனுக்கு இருந்தது.அதனால் பிள்ளைகள் அவர்களது அம்மாவுடனேயே இருந்து விடட்டும் .அவர்களுக்கும் சேர்த்து செட்டில் செய்து விடுவது நல்லது என்று நயன் கருதி இருக்கலாம் என்று ஒரு தகவல் ஓடிக்கொண்டிருந்தது.
இதைப்பற்றி பிரபுதேவாவிடம் ஒருதடவை கேட்டபோது “அட விடுங்க சார் “என்று ஒற்றை வரியில் க ட் பண்ணிவிட்டார்.
நயன்தாரா -பிரபுதேவா காதல் முறிவுக்கு இதுதான் உண்மையான காரணம் என்கிறார்கள்.
எது எப்படியாக இருந்தால் என்ன தற்போதைய விக்னேஷ்சிவனுடனான காதல் மிகவும் வலிமையானதாக தெரிகிறது.












