
மாஸ்டர் முடிந்து விட்டது.
ஏப்ரலில் சித்திரை மாதப்பிறப்பு நாளில் வெளியாகும் என நம்பினார்கள்.
கொரானா கொடிய நோயினால் மாஸ்டருக்கு வழி கிடைக்கவில்லை. ஒரு அள்ளு அள்ளலாம் என நம்பிக்கொண்டிருந்த விநியோகஸ்தர்கள்,தியேட்டர்காரர்கள் மனசுக்குள் டிராக்டர் ஓடினாலும் வெளிக் காட்டிக் கொள்ள முடியாத நிலை.
ஜூன் ஜூலைக்கு தள்ளிப்போகுமோ என்கிற கவலையில் இருக்கிறார்கள். சிலர் வட்டிக்கு விடுகிறவர்கள்,பலர் வட்டிக்கு வாங்கி முதலீடு செய்பவர்கள்.
வட்டிக்கு வாங்கியவர்கள்தான் பேஸ்த் அடித்துப் போயிருக்கிறார்கள் வட்டி ஏறிக்கொண்டு போகுதே என்கிற கவலை.
தளபதியின் ரசிகர்களுக்குத்தான் மிகவும் கவலை. “எப்ப வருவாரோ எந்தன் களி தீர”என்கிற ஏக்கம்.
மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கும் கவலை. பள்ளி இறுதி தேர்வு எழுதிய மாணவனின் நிலையில் ரிசல்ட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்து இயக்கப்போவது உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸின் படம் என்கிறார்கள்.
கதையின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றும் சொல்கிறார்கள். ஆனால் எதுவும் அதிகாரப் பூர்வமான செய்தி இல்லை.
லோகேஷ் கனகராஜ்க்கு” டிவிட்டரைத் தவிர பேஸ்புக் இன்ஸ்ட்ராகிராம் ஆகியவற்றில் கணக்கு இல்லை அவை எல்லாம் பொய்யானது” என்கிற பதிவு மட்டும் உண்மையானது.












