
அந்தாதுன் …தபு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.
இந்தியில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். இந்த படத்தை தெலுங்கில் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள் .நாயகன் நிதின்.!
தபு நடித்திருந்த கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என்கிற ஆலோசனை ஓடிக்கொண்டிருக்கிறது.
அனுசுயா என்கிற நடிகையை மனதில் வைத்துக் கொண்டு காயை நடத்தினார்கள் .பிளாக் காமடி,திரில்லர் ரக கதைக்கு கொஞ்சம் முரட்டுத்தனமான தோற்றமும் கவர்ச்சியும் வேண்டும்.
அது அனுசுயாவிடம் இருக்கிறதா?
இல்லப்பா ரம்யா கிருஷ்ணன்தான் சரியான ஜாய்ஸ் .அவங்களையே போட்டுரலாம் என்று நிதினும் இயக்குனர் காந்தியும் முடிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால் ரம்யா கிருஷ்ணனின் கால்ஷீட் கிடைக்குமா? அதுக்கு அவர் சரிப்பட்டு வருவாரா?












