இன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ்.
அண்ணன் செல்வராகவன்,சகோதரிகள் இருவர்.
இருவரில் ஒருவர் டாக்டர் கார்த்திகா கார்த்திக். எல்லோருமே செட்டில் ஆகி விட்டாலும் குலதெய்வம் கோவிலுக்கு ஒன்றாக சென்று வருவார்கள். விடுமுறை நாட்களில் ஒன்றாக கூடுவார்கள்.
கொரானா கொள்ளை நோய் காரணமாக சமூக விலகல் .தனித்து வாழ்தல் என்பது அவசியமாகி விட்டது.
இது குறித்து தனுஷின் சகோதரி டாக்டர் கார்த்திகா கார்த்திக் குடும்பப்படத்துடன் மனக்கவலையை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
“என் வாழ்க்கையில் இதுபோல நாம் பிரிந்து இருந்தது இல்லை.மாதத்தில் 2 தடவையாவது சந்தித்து விடுவோம். ஒரே நகரத்தில் இருந்தும் நாம் பிரிந்து இருக்கிறோம்.எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களை சந்திக்க முடியாமல் இருக்கிறேன். உங்கள் குடும்பத்துடன் நீங்கள் நேரத்தை செலவிடுவதை விட வேறு முக்கியமானது எதுவும் இல்லை” என்பதாக பதிவு செய்திருக்கிறார் அக்கா.