am always against corruption. I can make corrupt free TN . Damn Sure that I can become CM in 2021
“டே டொம்மை நீ இந்த எகிறு எகிறுன்னா எங்க மேடம் கன்பீஸ் ஆவாங்கன்னு நென்சுக்கினியா ,மவனே பேசாம எஸ்ஸாயிடு!” என்று ஒரு ரசிகர் மன்றத்து ஆளை ஒரு ஆள் அசால்ட்டா அடிச்சு தூக்குனான் .என்னய்யா நடக்குதுன்னு கிட்டப்போய் விசாரிச்சேன்.
உதார் விட்ட ஆளு கவர்ச்சி கோடவுன் மீரா மிதுன் ரசிகனாம்.
என்ன சொல்றார்னு விசாரிக்க 2021 -ல் “மீரா மிதுன் மேடம்தான் சி.எம்.ங்கிறான்.!
கொரானா குழப்பத்தில் யார் யாரெல்லாம் கூவத்தை மணக்க விடுறாங்க பாருங்க. என்ன சார் சொல்றீங்கன்னேன்.
“எங்க மேடம் மீரா மிதுன் இன்னா சொல்லிக்கிறாங்கன்னா லஞ்ச ஊயல சல்லுன்னு கடாசணும்னா அவங்கதான் சி.எம் ஆகணும்னு வாய்ஸ் விட்ருக்காங்க. இந்த நாட்டை பியூராக்கணும்னா அவங்க வந்ததான் முடியும்னு சொல்லி கிறாங்க .2021 -ல் மேடம் மீரா மிதுன் தான் சி எம்.! இதத்தான் சொன்னேன்.”என்றான் .
யோவ் நடந்தாலும் நடக்கும் யா !நாம்பதான் ரஜினி வருவார் ,கமல் வருவார் ,ஸ்டாலி ன் வருவார் என்று நம்புகிறோம். இந்த பொண்ணு இந்த ஆதி அடிக்கிதே !