இவரைப் போன்றவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிற அளவுக்கு ஏழை எளியவர்கள் இல்லாதவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ்.
மாற்றுத்திறனாளிகள் ,திருநங்கைகளை மதித்து ஆக்கப்பூர்வமான வழிகளில் அவர்களின் வாழ்வாதாரம் செழிப்பதற்கு துணை நிற்கிறார்.
கொரானா கொடிய கொள்ளை நோய் காலத்தில் இவர் ஆற்றி வருகிற அளப்பரிய பணி அனைவராலும் பாராட்டப்பெறுகிறது. தன்னார்வ தொண்டு அமைப்புகளும் ,தனியார்களும் அரசு செய்ய வேண்டிய நற்பணிகளை செய்து வருகிறார்கள். சாலையோர குடிமக்களுக்கும் ,தொழில் நாடி வந்த அயலார்களுக்கும் உதவிகளை செய்து வருகிறார்கள்.
ஆனால் தமிழக அரசு அத்தகைய நற்பணிகளுக்கு திடீர் தடை விதித்திருக்கிறது.
தானும் செய்ய மாட்டான்.செய்கிறவர்களையும் தடுத்து விடுவான் என்பது கிராமத்து பெரியவர்கள் சொல்வார்கள்
அதைப்போல இருக்கிறது அரசின் தடை உத்திரவு.
இதற்கு ராகவா லாரன்ஸ் தனது கண்டனத்தை வருத்தமாக பதிவு செய்திருக்கிறார். தமிழக முதல்வருக்கு உருக்கமாக கோரிக்கை வைத்திருக்கிறார்.
இனி,