மக்கள் சேவையே மகேசன் சேவை என அரசியல்வாதிகள் வாழ்ந்திருந்தால் லஞ்சம் ஊழல் வளர்ந்திருக்காது. ஊழல் அரசியல்வாதிகள் ஆரோக்கியமாகவே வாழ்கிறார்கள்.
உயிரைப் பணயம் வைத்து கொரானாவை எதிர்த்து போரிடுகிறவர்கள் டாக்டர்கள். இவர்களையும் நோய்த் தோற்று விட்டு வைக்கவில்லை என்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
வேதனையான தகவல்.
தமிழகத்தில் நோய்த் தொற்று வந்தவர்களில் 11 பேர் உயிருடன் இல்லை.
959 பேர் தொற்று வந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிற டாக்டர்களில் 7 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அரசு டாக்டர் . இவர் 50 க்கும் அதிகமானவர்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்.இவரது சக டாக்டருக்கும் கொரானா பாதிப்பு.
மாம்பலம் அரசு மருத்துவமனை டாக்டர்.
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உதவிப் பேராசிரியர் டாக்டர். இவர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறாராம்
பழைய வண்ணாரப்பேட்டை ரெய்னா மருத்துவமனை பெண் டாக்டர் ,
கீழ்ப்பாக்கம் நியூ ஹோப் மருத்துவமனை டாக்டர்,இவரது மகளும் டாக்டர்.இருவருக்குமே கொரானா பாசிட்டிவ் .மருத்துவமனை சீல் வைக்கப்பட்டிருக்கிறது.
மக்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவைப்படுகிற கடுமையான கட்டத்தில் தமிழகம் இருக்கிறது.