ரொம்ப நாளாச்சு …பிரபுதேவாவின் முன்னாள் குடும்பத்தைப் பற்றி விசாரித்து…
அவரது முன்னாள் மனைவி ரமலத் என்ன பண்ணுகிறார்?
சென்னை அண்ணா நகரில் இருக்கிற வீட்டில் வழக்கம் போல இருக்கிறார்.
“என்னுடைய பிள்ளைகளை அவங்க அப்பா (பிரபுதேவா )பாசமுடன் நல்லா பாத்துக்கிறார். பசங்களும் அப்பான்னா உசுரா இருக்காங்க. மும்பை, வெளிநாடுன்னு கூட்டிட்டு போயிருக்கிறார்.எந்தவிதமான பிரச்னையும் கிடையாது. நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். பீச் ரோட்டுல இருக்கிற வீட்டு வாடகைதான் எனக்கு வருமானம்.எந்த குறையும் இல்ல. அவர் ஓ.எம்.ஆர்.ல இருக்கிற வீட்டுல இருக்கிறார்.நான் இந்த வீட்டில இருக்கேன் “என்று மட்டும் ரமலத் கூறினார். வேறு யாரை பற்றியும் அவர் பேசத் தயாராக இல்லை.