
மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார். ஆனால் அரசோ,அமைச்சர்களோ அவரது கேள்விகளுக்கு உரிய பதில்களை இதுவரை சொல்லவில்லை.சட்டை செய்வதில்லை.
பதில் சொல்லி அவரை பெரிய மனிதராக்கிவிடக்கூடாது என்று நினைக்கிறார்களோ!
ஒரு பதிலால் ஒரு மனிதர் உயரத்துக்கு செல்ல முடியும் என்றால் அரசும் அமைச்சர்களும் அவ்வளவு பலவீனமா?
ஆனால் பதில் வரவில்லை என்றாலும் “யாம் வினா தொடுக்க தயங்கோம் “என்பதை போல இன்று மீனவர்களுக்காக ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.
ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி?
குறைந்தது மீன் வளத்துறை மந்திரியாவது பதில் சொல்வாரா?












