தமிழகத்தின் பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் யை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு பின்னர் டைவர்ஸ் வாங்கியவர் நடிகை அமலாபால்.
ஆடை போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆகியவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் கவர்ச்சியான படங்களையும் வெளியிட்டு வந்தார்.
காலம் இப்படியே போய் விடுமா என்ன?
திடீரென தன்னுடைய பாய் பிரண்ட் பவானிந்தர் சிங் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார் என்கிற செய்தி படங்களுடன் வெளிவந்தன.அதில் அந்த ஆண் நண்பருடன் லிப் கிஸ் பண்ணுகிற படமும் இருந்தது.
இதைப்பற்றி அமலாபாலோ ,அவரது குடும்பமோ எந்த வித மறுப்பும் சொல்லவில்லை. விளக்கமும் சொல்லவில்லை.
ஊடகங்களும் உண்மைதான் என நம்பிக்கொண்டிருந்தன .
இந்த நிலையில்தான் அமலாபாலின் விளக்கம் ஒரு ஆங்கில இதழில் வெளியாகி இருக்கிறது.
அதிலும் கூட இத்தனை நாள் அமைதியாக இருந்தது ஏன் என்பதற்கான விளக்கம் எதுவுமில்லை.
நேரடியான விளக்கம்தான்!
“இப்போதைக்கு எனக்கு கல்யாணம் இல்லை. இப்ப நான் தனி ஆள்தான்.! படங்களில் தீவிரமாக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.முழுக்கவனமும் அதில்தான்!
கல்யாணம் என்பது முடிவானால் அதை நானே சொல்வேன்.என் காதலைப் பற்றி ,கல்யாணத்தைப் பற்றி பேசுவேன்.
அதுவரை யாரும் வதந்திகளை பரப்பாதீர்கள் .நேரம் காலம் வரும் .சொல்வேன்” என்கிறார்.
ஒரு உண்மை வெளியாகி இருக்கிறது “நடப்பதாக இருந்தால் அது லவ் மேரேஜ்!