இந்த கொடிய கொள்ளை நோயான கொரானா எவரையுமே விட்டு வைக்காது .இளைத்த உடம்பாக இருந்தால் இலகுவாக ஏறி அமர்ந்து கொள்கிறது.
முரட்டுத்தனமான எதிர்ப்பு சக்தி உடையவனாக இருந்தால் அவன் ஊரடங்கை மீறி உலா வருகிறபோது போராடி உட்கார்ந்து கொள்கிறது.
கடமையை செய்கிறவர்கள் என்று இரக்கம் பார்ப்பதில்லை அந்த இழிந்த பிறவி கொரானா .
மராட்டிய மாநில வீட்டு வசதி வாரியத்தின் அமைச்சர் ஜித்தேந்திரா .
இவருக்கு கொரானா என்பதாக ராஜ்ய சபை உறுப்பினரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகர் ராஜ்பப்பார் தெரிவித்திருக்கிறார்.
கொரானா நோய் தொற்று ஆட்களை கண்டு பிடிப்பதற்காக சென்ற ஒரு போலீஸ்காரரை சந்தித்து விவரம் கேட்டறிந்த போது அமைச்சரை தொற்றிக்கொண்டிருக்கலாம் என்கிறார்கள். அவரது வீட்டில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள் .அமைச்சருடன் பணியாற்றிய அதிகாரிகள் இருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள் ,