மிஸ்கினுக்கும் விஷாலுக்கும் நடந்த மோதல் நல்லதுக்கோ கெட்டதுக்கோ ? தெரியலீங்க.!
ஆனால் விஷாலை இயக்குநராக மாற்றி விட்டது. மிஸ்கினை, வெறி ஏற்றி விட்டிருக்கிறது. விஷாலுக்கு போட்டியாக ஒரு படத்தை இயக்கி துப்பறிவாளன் 2 படத்தை மண் கவ்வ வைக்க வேண்டும் என்கிற வைராக்கிய வெறியை ஏற்படுத்தியிருக்கும் அல்லவா!
திரையுலகில் தனது பலத்தை மீண்டும் நிரூபிக்கும் வகையில்,அடுத்த படத்தை பெரிய வெற்றிப்படமாக இயக்கி,அந்த வெற்றியை விஷாலுக்கு பதிலடியாக தருவது என முடிவெடுத்து இருக்கிறார் மிஸ்கின்.
அந்தப் படத்திற்காக நடிகர் சிம்புவை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாதயாரிக்கிறார் என்கிறார்கள் ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஏற்கனவே சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் ,கன்னடப் படமான ‘முப்தி’யின் தமிழ் ரீமேக்கை தயாரித்து வந்தது. சிம்பு வில்லன் வேடம் ஏற்ற இப்படம் ‘பல’ காரணங்களால் படப்பிடிப்பு அப்படியே நின்று போனது.
இந்நிலையில், ‘முப்தி’ தமிழ் ரீமேக் கைவிடப்பட்டதாகவும், அதற்கு பதிலாக சிம்புவின் கால்ஷீட்டுகள் மிஷ்கினின் படத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும் ,இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.