‘விளையும் பயிர் முளையிலே தெரியும் ‘என்பார்கள்.
ரகுமான் வீட்டுக்குட்டி இன்று நினைத்துப் பார்க்கிறது.
ஜி.வி.பிரகாஷ். முன்னணி இசை அமைப்பாளர்களின் ஒருவர். நடிகரும் கூட.! ரகுமானின் சகோதரி பெற்ற பிள்ளை.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலே…’ பாடல்தான் பிரகாஷின் அரிச்சுவடி! பாடுகிறபோது 6 வயது ஆனால், அதற்கு முன்பே மூன்றரை வயதிலேயே அவரது மாமா ஏ,ஆர்.ரகுமான் அவரை, ‘உனையன்றி தெய்வம் ஏது… உலகெங்கும் இல்லை அல்லா… உனக்கினை துணையாய்ச் சொல்ல ஒன்றில்லை என் அல்லா … “எனத் தொடங்கும் இஸ்லாமிய பக்திப்பாடலை பாட வைத்திருக்கிறார்
ராகம், சுருதி சுத்தமாய் ஒலித்தது அந்த மழலைக்குரலில்!
ஏ.ஆர்.ரஹ்மானின் வீட்டு ஒலிப்பதிவு கூடத்தில் ஏஆர்.ரகுமான் கீபோர்டு முன்பு அமர்ந்திருக்க, அவர் அருகில் இசைக்கலைஞர் தோரணையில், விரல் சூப்பும் குழந்தையாக, தலையில் குல்லாவுடன் ஜிவி.பிரகாஷ் அமர்ந்திருக்கிறார்.
இந்த வீடியோவை எப்படியோ தேடிப்பிடித்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்
இந்த வீடியோவை எப்படியோ தேடிப்பிடித்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்
தற்போது வைரலாக பரவி வரும் இவ்வீடியோ குறித்து ஜி.வி.பிரகாஷ் என்ன சொல்கிறார்
,”இன்னும் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் மூன்றரை வயது சிறுவனாக இருக்கும்போது என் மாமா ஏ.ஆர்.ரஹ்மான் என்னை இந்தப் பாடலை பாட வைத்தார்.ராகம், ஸ்ருதி சுத்தம் என்பது ஆண்டவன் எனக்கு கொடுத்த வரமாக கருதுகிறேன் .
ஒரே டேக்கில் பாடிவிட்டேன் என பலரும் பாராட்டியது இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது .அதன் பிறகு எனக்கு 6 வயது இருக்கும் போது தான் ஜென்டில்மேன் படத்தில் சிக்குபுக்கு ரெயில் பாடலை பாடினேன்.கடந்த 2018 ல் எதையோ தேடும் போது எனக்கு இந்த வீடியோ சிக்கியது “என்கிறார் .
புதிய வரவான மக்களை பற்றி சொல்வதென்ன?
” எங்கள் (ஜி.வி.பிரகாஷ்,சைந்தவி) இருவரின் ஜாடை இருந்தாலும் மிகவும் அழகாக இருக்கிறாள் என் மகள் பிறந்த அந்த தருணம் அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.எங்க குடும்பத்தினரை சந்தோஷத்தில் ஆழ்த்திய குட்டி தேவதை அவள்” என்கிறார்.