“சந்திரமுகி பார்ட் 2 வில் ஜோதிகா நடிக்கிறாங்களா?”
இயக்குநர் பி.வாசு சற்று ஜெர்க் ஆனார்.
“யாரிட்ட பேசுறதுன்னே தெரியலியே…நேரே பார்த்துப் பேசுனாத்தானே கதையை சொல்லி கால்ஷீட் கேட்கமுடியும். யாரையும் கேட்காமல் எப்படி ஆர்ட்டிஸ்ட் செலக்ஷன் பத்தி சொல்ல முடியும்.? டோட்டலா அப்படியே உட்கார்ந்திருக்கோம். உயிரோடு போட்டோ பிரேமுக்குள் உட்கார்ந்திருக்கிற மாதிரி ஃ பீல்!” என்று சிரிக்கிறார் வாசு.
தொடர்ந்து “என்னுடைய பட ஷூட்டிங்னா 125 பேருக்கு குறையாம இருப்பாங்க. நாங்கதான் சமைப்போம். இப்பதான் கூட்டமே கூடாதுங்கிறாங்களே! தூக்கித் தூக்கிப்போட்டா மலேரியா காச்சல். தொடர்ச்சியா நாலஞ்சு நாள் 100 டிகிரிக்கு மேல காச்சல் அடிச்சா டைபாயிடு. இப்ப எதை வச்சு கொரானாவை கண்டு பிடிக்கிறது? சும்மாவே சிலர் இருமுவாங்க…சிலருக்கு அப்பப்ப சளி பிடிக்கும். இப்ப நல்லா இருக்கிறவனோடு பேசுனாலும் வந்துடுதே! எந்த அறிகுறிய வச்சு கண்டு பிடிக்கிறது? நமக்கு எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கிற மாதிரி வாழக் கத்துக்கணும்.” என்றார் .
“எப்படி வாசு உங்களால ஒரே இடத்தில உக்கார்ந்திருக்க முடியுது ?நீங்க காலில் சக்கரத்தை கட்டிட்டு ஓடுற ஆளாச்சே?”
“நாங்கல்லாம் பந்து மாதிரி..அங்கே இங்கேன்னு ஓடிட்டே இருக்கணும். ஆட்களோடு எதிரெதிரா உட்காந்து விவாதிப்போம்.விவாதம் பண்ணுவோம். இந்த கேரக்டர் இப்படி இருந்தா இன்னொரு கேரக்டர் எப்படி இருக்கணும்னு விவாதம் பண்ணுவோம்.அப்படித்தான் சீன் பிடிக்க முடியும். இப்ப அதுக்குத்தான் வழியில்லாம போச்சே.!”
“சந்திரமுகி 2 பண்ற மாதிரி சின்னத்தம்பி 2பண்ற ஐடியா இருக்கா?”
“அடுத்த வருஷம் வந்தா சின்னத்தம்பி 30 வருஷம். எனக்கு நடிகன் 2 பண்ணணும்கிற ஆசை இருக்கு. சத்யராஜ் அண்டப்புளுகர், கவுண்டர் அகில உலக அண்டப்புளுகர். இவங்களுக்கு பிறக்கிற பிள்ளைங்க எப்படி இருக்கும்? சிவகார்த்திகேயன் மாதிரியான ஆர்ட்டிஸ்ட் கிடைச்சா அருமையா கதை பண்ணலாம். காமடிக்கு சிவகார்த்திகேயன் சூப்பரா பொருந்துவார்” என்கிறார் இயக்குநர் பி.வாசு.