குவாரன்டைன் நேரத்தை எப்படி செலவிடுகிறார்கள்?
அம்மியில் மசாலா அரைத்தார் இயக்குநர் சீனு ராமசாமி.
வீட்டை பெருக்கி சுத்தம் செய்தார் ராஜமவுலி..
நடிகை தமன்னா வெற்றுடம்பில் (?) தலையணையைக் கட்டிக்கொண்டு தரையில் கிடந்தார் .
இப்படி பலர் தங்களது கொரானா காலத்துத் தனித்திருந்த காலத்து அனுபவங்களை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்திருந்தார்கள் .ஆனால் திரிஷா மட்டும் வித்தியாசமாக ஒன்றைக் கற்றுக்கொண்டிருக்கிறார்.
கற்றுக் கொடுத்தவர் கவுதம் வாசுதேவ் மேனன்.
செல்போன் வீடியோவை ரசிகர்களுக்கு’ 4’கே தரத்தில் கொடுப்பது எப்படி என்பது குறித்து இயக்குனர் கவுதம் மேனனிடம் கேட்டு தெரிந்து இருக்கிறார். அவரும் செல்போனில் வீடியோ கால் வழியாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
இருவரும் சிலவற்றை படமாக்கியும் இருக்கின்றனர். !
“என்ன அருமையான காலைப்பொழுது..நாங்கள் படம் பிடித்ததை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் ஆர்வமாய் இருக்கிறோம் நன்றி கவுதம் மேனன் சார் “என திரிஷா பதிவிட்டுள்ளார்.