“சிறந்த பக்தன் எல்லாக் கடவுளையும் நேசிப்பவன் எதிர்பார்ப்பில்லாமல் தர்மம் செய்பவன் கஷ்டப்பட்டு முன்னேறியவன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ,ஒரு குழந்தை கேட்டதாக என்றோ சொன்னதை இன்று எடுத்து சர்ச்சையாக்குவது வருத்தமாக இருக்கிறது.” என்று வருத்தப்பட்டிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.
தனக்கு ஆதரவாக அனைத்துத் தரப்பிலிருந்தும் வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் விஜய்சேதுபதி. நானும் ரவுடிதான் ஸ்டைலில்!
கோவிலில் இருந்து வெளிவருகிற அந்தப்படத்தில் கூப்பிய கரங்கள்,நெற்றியில் குங்குமம் என சகலரையும் கவரும் வகையில் அந்தப்படம் இருக்கிறது.