Tuesday, September 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கஸ்தூரியின் அடியில் தமிழக அரசுக்கு நாக்குத் தள்ளுகிறது.!

admin by admin
May 10, 2020
in News
424 4
0
592
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

You might also like

மலையாள சினிமா வரலாற்றில் ‘ஹாஃப்’ (HALF) திரைப்படம் உலகளாவிய சாதனை படைத்துள்ளது.

நடிகை நிதி அகர்வாலின் புதிய பயணம்!

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

அரசியல்வாதிகளுக்கு அவ்வப்போது சுளீர் ,பொளேர் ,சவுக்கடி கொடுக்கும் ஒரே நடிகை கஸ்தூரி .டாஸ்மாக்கை திறப்பதற்காக உச்ச நீதிமன்றம் போயிருக்கிற தமிழக அரசை நாக்குத் தள்ள அடித்திருக்கிறார் கஸ்தூரி.!

“தனியொருவனுக்கு தண்ணியில்லையினில் ஜகத்தினை அழித்திடுவோம்ங்கற அசுர வேகத்தோட இன்னிக்கு உச்ச நீதி மன்றத்துல தமிழகம் சார்பா ரெண்டு கேஸ் பைலை பண்ணியிருக்காங்க .
மே 17 வரைக்கும் கூட தாக்கு பிடிக்க முடியாதாம். தண்ணியில்லாம தமிழகம் இருந்திறக்கூடாதாம் ! இது காவிரி பிரச்சினையா, முல்லை பெரியார் பிரச்சினையா , தமிழக மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினைக்கா என்று யாரும் தப்பா நினைச்சிறாதீங்க.
அதையெல்லாம் விட மிக முக்கியமான, மக்களுக்கு அத்தியாவசியமான, சமூகத்துக்கு தேவையான சாராய மேட்டர் இது !
தங்கு தடையில்லாத தண்ணி சப்ளை நடத்தும் ‘உரிமையை’ கேட்டு தமிழக அரசு ஒரு மனு , மேலதிகமாக டாஸ்மாக் இன்னொரு மனு, சுப்ரீம் கோட்டுல இன்னிக்கி ! அட அடா ! தமிழனுக்கு தண்ணி வேணும்கற இந்த பொறுப்புணர்ச்சிய எப்படி பாராட்டுறதுன்னே புரியலையே!
இது கொள்கை முடிவாம்.
கோர்ட் இதில் தலையிட கூடாதாம். கொள்கைன்னா ‘வாய்மையே வெல்லும்’ ‘தர்மம் தலைகாக்கும்’ ‘சம உரிமை சமூக நீதி’ இதெல்லாம் கொள்கை. ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்றால், அது கொள்கை. அதை சொன்ன அண்ணா இன்று இருந்தால், ‘அண்ணா திமுக ‘ அரசின் கொள்கையை பார்த்து என்ன சொல்லுவார்?
இங்கே யாரும் பூரண மதுவிலக்கை கூட கோரவில்லை. கொரோனா தொற்று அதிகரித்து அச்சுறுத்தும் வேளையில், டீக்கடை கூட திறக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மதுக்கடையை திறப்பது என்ன லாஜிக் என்றுதான் கேட்கிறோம்.
பள்ளிகள், கடைகள், சினிமா, கோவில் தேவாலயங்கள், ஏன் , பார்க்கு கடற்கரையை கூட மூடிவிட்டார்கள். கோவிலிலும் உடற்பயிற்சிக்கூடத்திலும் எதிர்பார்க்கமுடியாத சுயக்கட்டுப்பாட்டை மதுக்கடையில் உத்திரவாதம் கொடுக்கிறது நமது அரசு!
கேரளாவில் மது என்பதை தவறாகவே பார்ப்பதில்லை. குடிப்பதில் சாதனையாளர்கள் என்று பெருமை பெற்றவர்கள் மலையாளிகள். பாண்டிச்சேரியும் மது விற்பனைக்கு பெயர் போனது. அப்பேற்பட்ட கேரளாவிலும் புதுச்சேரியுமே மதுக்கடைகளை ஊரடங்கு நேரத்தில் திறக்க முற்படவில்லை.
அப்புறம் எதற்கு அண்டை மாநிலம் என்று சாக்கு சொல்லுகிறீர்கள்? ஊரடங்கு நேரத்தில் அடுத்த தெருவுக்கு கூட சென்றால் கூட ஆயிரம் கேள்வி கேட்கிறார்கள், அண்டை மாநிலத்துக்கு அவ்வளவு ஈசியாக ஆளை விட்ருவீங்களா? இப்பிடி சொல்வது நமது காவல்துறைக்கு அவமானமில்லையா.
அண்டை மாநிலத்துக்கு காசை கொடுக்காதே, பக்கத்துக்கு ஊருல போயி குடிக்கற அந்த பணத்தை எனக்கே குடு, நானே ஊத்தி கொடுக்கறேன் என்று சொல்லும் அரசு, அடுத்தது இது போன்ற வருமான இழப்புக்களை தடுக்க என்னவெல்லாம் செய்யலாம்?
எப்படியெல்லாம் கொள்கை முடிவு எடுக்கலாம்? பக்கத்துக்கு மாநிலத்தில் லாட்டரி, சூதாட்ட விடுதிகள் உள்ளன. அங்கு ஏன் நம்மாட்கள் போகவேண்டும், அதையும் இங்கே திறக்கலாம். உள்ளூரிலேயே எல்லாரும் லாட்டரியடிக்கலாம். கோவா நேபாள் ஸ்ரீலங்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளுகளில் கேசினோ உள்ளது. பணக்காரர்கள் அங்கே போய் விடுகிறார்கள். இங்கே மலிவு விலை சூதாட்ட விடுதிகளை தொடங்கி நம்ம மக்களை அடகு வைக்கலாம்.
பாகிஸ்தான் காரன் கள்ளநோட்டு அடிக்கறான். நாட்டுக்கு ரொம்ப நஷ்டம். கள்ளநோட்டை நாமே அடிச்சுட்டா நம்ம ஊரு அச்சு தொழிலும் கூடும், அண்டை நாட்டுக்காரனுக்கும் ஆப்பு வைச்சுடலாம். கள்ள மார்க்கெட்டில் கஞ்சா ஹெரோயின் போதை மருந்து விற்பனை அமோகமாக இருக்கிறது. கள்ள மார்க்கெட்டை முறைப்படுத்தி அங்கீகாரம் கொடுத்துவிட்டால், போதை பொருள் விற்பனை துறையில் அரசுக்கு நல்ல வரி வரும், மக்களுக்கும் தரமான போதை கிடைக்கும். அப்புறம்….
பலான விஷயங்களுக்காக பாங்காக் வரை போகும் நம்ம ஆளுங்க பணத்தை அங்கே செலவு பண்ணிடறாங்க. அதனாலே….”
இங்கேயும் பலான கடையை திறக்கலாமா?என்று தமிழக அரசை மட்டுமல்ல  சாராயக்கடைக்கு ஆதரவு காட்டும் அத்தனை பேரையும் திருக்கை வாலினால் நாலு இழுப்பு இழுத்திருக்கிறார்.கஸ்தூரி.
Tags: கஸ்தூரிடாஸ்மாக்தமிழக அரசு
admin

admin

Related Posts

மலையாள சினிமா வரலாற்றில் ‘ஹாஃப்’ (HALF) திரைப்படம் உலகளாவிய சாதனை படைத்துள்ளது.
News

மலையாள சினிமா வரலாற்றில் ‘ஹாஃப்’ (HALF) திரைப்படம் உலகளாவிய சாதனை படைத்துள்ளது.

by admin
September 22, 2026
நடிகை நிதி அகர்வாலின் புதிய பயணம்!
News

நடிகை நிதி அகர்வாலின் புதிய பயணம்!

by admin
September 21, 2026
ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!
News

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

by admin
September 21, 2026
பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !
News

பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

by admin
September 21, 2026
‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!
News

‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

by admin
September 21, 2026

Recent News

நடிகை நிதி அகர்வாலின் புதிய பயணம்!

நடிகை நிதி அகர்வாலின் புதிய பயணம்!

September 21, 2026
ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

ராஷ்மிகாவின் : ‘மைசா’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது!

September 21, 2026
பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘ஆக்டோபஸ்’ !

September 21, 2026
‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

‘நந்தன் 2’.ம் பாகம் உருவாகிறது!

September 21, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?