பாலிவுட்டின் தாராள கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் பூனம் பாண்டே. மாடலாக இருந்து சினிமாவுக்கு வந்தவர்.அமித் சக்சேனா இயக்கிய நாஷா, எ ஜர்னி ஆஃப் கர்மா ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு கன்னடத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில்,பூனம் பாண்டே ஊரடங்கை மீறி தனது ஆண் நண்பரான சாம் என்பவருடன், மும்பை பாந்த்ரா மற்றும் மரைன் டிரைவ் பகுதிகளில் சொகுசு காரில் சுற்றியதாகவும், இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரது பி.எம்.டபுள்யூ சொகுசு காரையும் பறிமுதல் செய்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில்,பூனம்பாண்டே தனது டுவிட்டரில் , ‘என்னை கைது செய்ததாக கூறப்பட்ட அந்த நேரத்தில் நான் வீட்டில் மிகவும் பாதுகாப்பாக மொத்தம் மூன்று படங்கள் வரிசையாக பார்த்து கொண்டிருந்தேன்.இரவு முழுவதும் எனக்கு போன் கால்கள் வந்து கொண்டே இருந்தது பூனம் உங்களை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமேன்னு . ஏன் இப்படி தவறான செய்தியை பரப்புறாங்கன்னு தெரியல. நான் வீட்டில் பாதுகாப்பாக தான் இருக்கேன்’.எனக்கூறியுள்ளார்.
ஆனால் மும்பை காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர், ‘பூனம் பாண்டே,மற்றும் சாம் அஹமது என இருவர் மீது,செக்சன் 269,188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மை’ என்கிறார்.